3வது முறையாக கைதான சிவசங்கர் பாபா! சிபிசிஐடி அதிரடி

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:58 IST)
மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
மேலும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மூன்றாவது முறையாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இரண்டு வழக்குகளில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீண்டும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மாணவிகள் பாலியல் புகாரை அடுத்து சிவசங்கர் பாபா கைதான நிலையில் அந்த பள்ளியில் ஆசிரியர்கள் சிலரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

நள்ளிரவு 2:30 மணிக்கு ஆர்டர் செய்த பிரியாணி-குலாப் ஜாமூன்.. வாடிக்கையாளர் வாங்க மறுத்ததால் டெலிவரி ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்..!

பைக்கில் சென்றவரின் கழுத்தை மாஞ்சா காத்தாடி நூல்.. உயிர் போகும் நிலையில் மகளுடன் செல்போனில் பேச்சு..!

கல்யாணம் பண்ணக் கூடாது!.. ராணுவ வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு...

சென்னையில் 18 இடங்களை சுற்றிப்பார்க்க வெறும் 50 ரூபாய்.. இன்று முதல் அசத்தல் சேவை..!

அடுத்த கட்டுரையில்