Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு! தற்கொலையா?

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:11 IST)
மாணவி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி அருகே என்சிசி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து அவரது உடல் தற்போது சேலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மாணவி ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவராமன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த நபரால் வேறு   மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென சிவராமன் தற்கொலைக்கு முயன்று எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்