Publish Date: Fri, 23 Aug 2024 (07:11 IST)
Updated Date: Fri, 23 Aug 2024 (07:12 IST)
மாணவி பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே என்சிசி மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவரது உடல் தற்போது சேலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மாணவி ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவராமன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த நபரால் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென சிவராமன் தற்கொலைக்கு முயன்று எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.