Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு எம்.ஜி.ஆர்தான்!. சிவாஜியே அரசியல்ல தோத்துபோயிட்டார்!.. சிவக்குமார் பேட்டி!...

Advertiesment
sivakumar
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இந்தியாவில்தான் அதிகம். அதேநேரம் அப்படி அரசியலுக்கு வந்து ஒரு பெரிய இடத்தை பிடித்தது வெகு சிலர் மட்டுமே. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமே அரசியல் கட்சி துவங்கி அரசியலில் வெற்றி பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். அவருக்கு பின் ஜெயலலிதா அதிமுகவை சிறப்பாக நடத்தினார். தெலுங்கில் என்.டி.ராமாராவ் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருந்தார். அவருக்கு பின் பல வருடங்கள் கழித்து பவன் கல்யாண் துணை முதல்வர் ஆகியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பின் சிவாஜி கட்சி துவங்கினார். ஆனால் அவருக்கு வெற்றிகிடைக்கவில்லை. அவருக்கு பின் பாக்யராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் என பலரும் அரசியல் கட்சி துவங்கினார்கள். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை. விஜயகாந்த் மட்டுமே எதிர்கட்சி தலைவராக மாறினார். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லி பின் வாங்கினார். கமல் அரசியலுக்கு வந்தாலும் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார் ‘நடிகர்கள் நாடாள முடியும் என காட்டியவர் எம்.ஜி.ஆர். டொனால்ட் ரீகனுக்கு முன் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லை. உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி. அவரை போல நடிப்பதற்கு ஒருவர் பிறந்து வரணும்.. அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அவர் அரசியலில் தோற்றுப்போனார். அதாவது, நீங்கள் உழைத்துக்கொண்டே இருங்கள். மற்றவர்களை உங்களோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். எல்லாம் பெற்றவர்கள் யாருமில்லை. உங்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும்’ என பேசியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவ்ளோதான் சீட்!. இருந்தா இரு.. இல்லனா போ!.. திமுக அட்ராசிட்டி!.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!..