காவிரி நீர் பிரச்சனை; சிம்பு அதை சொன்னாரா? : இணையத்தில் பரபரப்பு
காவிரி நீர் பிரச்சனை; சிம்பு அதை சொன்னாரா? : இணையத்தில் பரபரப்பு
காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவிற்கு எதிராக நடிகர் சிம்பு கருத்து தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘கர்நாடகாவில் இனி என் படத்தை திரையிடமாட்டேன்’ என்று நடிகர் சிம்பு கூறிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
பலர் அவரை பாரட்டி.. தமிழண்டா.. கெத்துடா.. என்கிற ரேஞ்சில் கருத்துகளை கூறி வருகிறார்கள்..
‘பிரச்சனை வந்ததும் ஓடி ஒழியாம ஒன்னு சொன்னாலும் கெத்தா சொன்னன்யா.. அவன்தான் தமிழன்’ என்று அனல் பறக்கிறது.
இந்நிலையில், தான் அப்படி எதுவும் கூறவில்லை என்று சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யாரோ விஷமிகள் செய்த வேலையாம்... அமைதியா இருங்கப்பா...