Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வண்டல் மண் என்கின்ற பெயரில் செம்மண் கடத்தபடுவதை தடுக்க வேண்டும் - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

வண்டல் மண் என்கின்ற பெயரில் செம்மண் கடத்தபடுவதை தடுக்க வேண்டும் - விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

J.Durai

கோயம்புத்தூர் , செவ்வாய், 9 ஜூலை 2024 (10:11 IST)
கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக மனுஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்து அவர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சு.பழனிச்சாமி.
 
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழக முதல்வர் விவசாயிகள் பயன் பெறுகின்ற வகையிலும், நீர் நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தினால் அதிக அளவில் நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற வகையிலும் தேங்கி கிடக்கும் வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களில் போடுவதால் மண் வளம் பெருகும் என்ற தொலைநோக்கு எண்ணத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று டிராக்டர் மூலமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தார். 
 
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுக்கு இணங்க வட்டாட்சியர்கள் அனுமதியுடன் வண்டல் மண் எடுக்க ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க பட்டால் விவசாயிகளுக்கு நிபந்தனைகளுடன் உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
 
இதேபோல் கோவை மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதில் விவசாயிகள் என்கின்ற பெயரில் சூலூர், பேரூர், அன்னூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற பல்வேறு வட்டங்களில் அரசு விதிகளுக்கு புறம்பாக டிப்பர் லாரிகளில் விவசாயிகள் பூமியில் செம்மண் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்வதோடு சட்டவிரோதமாக குவிக்கப்பட்டும் வருகிறது.
 
குவிக்கப்பட்ட மண்ராயல்டி என்ற பெயரில் லோடு ஒன்றுக்கு இரண்டாயிரம் வசூலிப்பட்டு எடுத்து செல்ல அனுமதி வழங்குவதாக தகவல் தெரிய வருகிறது.
 
ஆகவே சட்டத்திற்கு புறழ்பாக வண்டல் மண் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை தடுத்திடவும் கனிமவள அதிகாரிகள் மூலம் குவிக்கப்பட்ட மண்,  எடுக்கப்பட்ட குளம்,குட்டை அல்லது தனியார் பூமிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மக்களே! ஒரு டிக்கெட் போதும்.. பேருந்து, மெட்ரோ எல்லாத்திலும் பயணிக்கலாம்! – ஹேப்பி அறிவிப்பு!