Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியும், அமித்ஷாவும் சகுனியும், துரியோதனனும்!? – சித்தார்த் ஆவேசம்!

Jamia University
Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (14:06 IST)
பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சகுனி மற்றும் துரியோதனன் போல செயல்படுவதாக நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீப காலமாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை ட்விட்டரில் தீவிரமாக விமர்சித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தற்போது மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முக்கியமாக பல்வேறு பல்கலைகழக மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது போலீஸார் கூட்டத்தை கலைக்க முயன்றபோது வன்முறை வெடித்தது. இதனால் வாகனங்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைக்கப்பட்டன.

பல்கலைகழகத்திற்கு சென்ற மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் அத்துமீறி பல்கலைகழகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.

இந்நிலையில் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த் ”அவர்கள் கிருஷ்ணனும், அர்ஜுனனும் அல்ல. அவர்கள் சகுனியும், துரியோதனனும். பல்கலைகழக மாணவர்களை தாக்குவதை நிறுத்துங்கள்” என கூறியுள்ளார்.

சித்தார்த் நேரடியாக மோடி, அமித்ஷா என்று குறிப்பிடாவிட்டாலும், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனாக சமீப காலமாக அவர்கள்தான் சித்தரிக்கப்பட்டார்கள் என்ற வகையில் சித்தார்த் குறிப்பிட்டுள்ளது அவர்களைதான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments