Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரை டாய்லெட் ஆக்கியது யார்? சித்தார்த், நெட்டிசன்கள் காரசார விவாதம்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (06:59 IST)
ட்விட்டரை டாய்லெட் போல் ஆக்கியது யார் என்பது குறித்த விவாதம் நடிகர் சித்தார்த் மற்றும் நெட்டிசன்கள் இடையே நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சித்தார்த் பதிவு செய்தார். பொய் சொன்னால் முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக முதல்வரை என்ன செய்யப்போகிறீர்கள் சித்தார்த் என நெட்டிசன் ஒரு கேள்வி கேட்டார் 
 
அதற்கு சித்தார்த் மிகவும் கோபமாக, ‘  ’மூதேவி கோவமோ, சந்தேகமோ வந்தா துப்பு இருந்தா போய் நீ கேளு, இல்ல உங்க அப்பனை போய் கேளு. நான் என் வேலைய தான் பாத்துட்டு இருக்குறேன். பொறுக்கி பசங்க இதுவே வேலையா போச்சு, டுவிட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க.வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும், என பதிலளித்தார் 
 
இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர். நியாயமாக ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதில் கூறாமல் டுவிட்டரை டாய்லெட் ஆக்கியது நீங்கள் தான் என நடிகர் சித்தார்த்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு முன்னால் பொங்கி எழுந்த சித்தார்த் தற்போது அமைதியானது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments