Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் கொடுத்த உதயநிதி!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (06:45 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்ட தனுஷ் என்ற மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார் 
 
நேற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தனுஷ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 10 லட்சம் நிதி உதவியாக அவரது பெற்றோருக்கு வழங்கினார். மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதியை நீட்தேர்வு காரணமாக இனியும் ஒரு உயிர் போகாத வண்ணம் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலரும் தனுஷ் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments