Publish Date: Thu, 19 Aug 2021 (22:23 IST)
Updated Date: Thu, 19 Aug 2021 (22:24 IST)
உயரம் குறைவாக பிறந்த கன்றுக்குட்டி ஒன்று தாயிடம் பால் கொடுக்க முடியாமல் திணறி வரும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பசுமாடு ஒன்று கன்று ஒன்றை ஈன்றது. இந்த கன்று மிகவும் குள்ளமாக இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
இந்த நிலையில் குள்ளமாக பிறந்த கன்று குட்டி தனது தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவித்ததை அடுத்து மாட்டுக்கு சொந்தக்காரர் அதற்கு உதவி செய்தார்
இந்த நிலையில் கால்நடை மருத்துவமனையில் பசுவுக்கு சினை ஊசி போட்டதால் தான் கன்று குள்ளமாக பிறந்துள்ளதாகவும், மேலும் கால் குளம்புகளால் சரியாக நடக்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது