தமிழகம் முழுவதும் இயங்கும் சிறு கடைகள் முதற்கொண்டு அனைது கடைகளும் தொழில் உரிமம் பெற வேண்டும் என்ற அறிவிப்பில் தமிழ்நாடு அரசு மாற்றங்களை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கிராமங்கள் தொடங்கி நகரம் வரை பெட்டிக்கடை தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரிய வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், நகரங்களில் இயங்கும் கடைகளுக்கு தொழில் உரிமம் முறையாக பெறப்பட்டு வருகிறது.
ஆனால் புறநகர், கிராமப்பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் கடைகள், நகரங்களில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடைகள் போன்றவை தொழில் உரிமம் பெறாதவையாக உள்ளன. இந்நிலையில் அனைத்துக் கடைகளும் தொழில் உரிமம் பெற வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதுடன், கடையின் தன்மைக்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.50 ஆயிரம் வரை தொழில் உரிமம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு சிறு, குறு வியாபாரிகளிடையே எதிர்ப்பு எழுந்த நிலையில், வணிகர் நல சங்கங்களும் சிறு கடைகளுக்கு இதில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கிராமப்புறத்தில் செயல்படும் சிறு, குறு வணிகர்கள் தொழில் உரிமம் பெற தேவையில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K