ரிச்சி தெருவில் அதிரடி மாற்றங்கள்: எப்போ என்னென்ன கடை இருக்கும்?

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (10:47 IST)
நோக்கில் மாநகராட்சி ரிச்சி தெருவில் உள்ள கடைகளை இரண்டு பிரிவாக பிரித்துள்ளது என தகவல். 
 
நேற்று தமிழகத்தில் 3,616 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3,616 பேர்களில் 1,208 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.  
 
இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் இருந்தி ரிச்சி தெருவில் வாடிக்கையாளர்களின் கூட்டம் மொய்க்க துவங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி கடைகளை இரண்டு பிரிவாக பிரித்து திங்கள், புதன் வெள்ளி ஒரு பிரிவு கடைகளும், செவ்வாய் வியாழன் சனி ஆகிய தினங்களில் மற்றொரு பிரிவு கடைகளும் இயங்க ஏற்பாடு செய்துள்ளனர். 
 
எந்தெந்த தினங்களில் எந்தெந்த கடைகள் திறந்து இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் பச்சை மற்றும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் 10 மணி முதல் 6 மணி வரை இந்த கடைகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments