கோவை கண்ணப்பன் நகர் பகுதியில், 75 வயது மாமியாரை 51 வயது மருமகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
கோவை கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணமாகி, 21 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனின் மனைவி இறந்த நிலையில், அவர் சோகத்தில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இந்த நிலையில், மணிகண்டனின் மகன் அவருடைய பாட்டியுடன் வசித்து வருகிறார்.
நேற்று தனது மகனையும், மாமியாரையும் பார்க்க மணிகண்டன் வந்துள்ளார். அப்போது அவர் முழு போதையில் இருந்ததாக தெரிகிறது. வீட்டில் தனது மகன் இல்லை, மாமியார் மட்டுமே தனியாக இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, அவர் மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அடுத்து அந்த மூதாட்டி அலறிய நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து மணிகண்டனை அடித்து மூதாட்டியை மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டனின் மகன் உட்பட அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை அடித்து நொறுக்கி காவல்துறையில் ஒப்படைத்தனர். தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
75 வயது மாமியாரை 51 வயது மருமகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.