Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் ஏற்கனவே CM… இப்போ PM- விஜய்யின் தாயார் ஷோபா நெகிழ்ச்சி!

Advertiesment
நான் ஏற்கனவே CM… இப்போ PM- விஜய்யின் தாயார் ஷோபா நெகிழ்ச்சி!

vinoth

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (11:29 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நடந்தது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு விஜய்யின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவரும் வந்திருந்தனர். அது தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக விஜய் தனது பேச்சின் போது தெரிவித்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய ஷோபா அவர்கள் “இப்போது போல எப்போதும் உண்மையா இரு விஜய்.  நீ நாட்டுக்கே ராஜா ஆனாலும் எனக்குப் பிள்ளை. தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. பெண்ணியம் காப்பாற்று. புரட்சிகர திட்டங்கள் தீட்டு.  வானில் பறக்கும் உன் அரசியல் கொடி. உன் வெற்றிக்கு இதுவே முதல் படி. ஏற்கனவே நான் CM(celebrity mother)  இப்போ நான் PM (proud mother)” எனப் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னை நிலவரம்..!