Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலியா கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல்! – சேஸிங் செய்யும் இந்திய போர்க்கப்பல்கள்!

Webdunia
சனி, 16 டிசம்பர் 2023 (16:06 IST)
அரபிக்கடலில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை மீட்க இந்திய கப்பற்படை கப்பல்கள் விரைந்துள்ளன.



சோமாலியா பகுதியில் இருந்து பிரிந்த பண்ட்லேண்ட் என்ற பகுதி கடற்கொள்ளையர்களின் புகலிடமாக திகழ்கிறது. அரபிக்கடல் பகுதிகளில் பயணம் செய்யும் கப்பல்களை கொள்ளையடிப்பது சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு வழக்கமாக உள்ளது.

இன்று மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்.வி.ருயின் என்ற கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. சோமாலியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த இந்த கப்பலை வழிமறித்த கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை கைது செய்து கப்பலையும் கடத்தி கொண்டு செல்கின்றனர். அவர்கள் கடத்தும் முன் கப்பலில் இருந்த மாலுமிகள் அளித்த “May Day” அவசர அழைப்பை இந்திய போர் கப்பல் பெற்றுள்ளது.

உடனடியாக கடற்கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பலையும், மாலுமிகளையும் மீட்க இந்திய போர்கப்பல்களும், விமானங்களும் புறப்பட்டுள்ளன. தற்போது கொள்ளையர்கள் கப்பலை தங்கள் புகலிடமான பண்ட்லேண்ட் பகுதிக்கு கொண்டு சென்று வரும் நிலையில் இந்திய கடற்படைக்கு உதவியாக ஐரோப்பிய கடற்படையினரும் பண்ட்லேண்ட் விரைந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட்: துரைமுருகன் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments