சென்னையில் விநாயகர் சிலை கரைக்க சென்ற ஊர்வலத்தின்போது விதிகளை மீற முயற்சித்த இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 7ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி நடைபெற்ற நிலையில் பல்வேறு பகுதிகளில் மக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வாங்கி தெருக்களில் வைத்து வழிபட்டனர். இந்நிலையில் நேற்று பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சென்னையில் இதுபோல பல பகுதிகளில் இருந்தும் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் குறிப்பிட்ட வழிகளை அனுமதித்திருந்தனர். அவ்வாறாக திருவெல்லிக்கேணி பாரதி சாலை வழியாக நேற்று விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்லப்பட்டபோது, இந்து முன்னணி அமைப்பினர் அப்பகுதியில் உள்ள பெரிய மசூதி தெரு வழியாக அனுமதியின்றி சிலைகளை கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
இதுத்தொடர்பாக ஜாம் பஜார் காவல் நிலையத்தில் 61 இந்து முன்னணி அமைப்பினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K