Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் பள்ளிகளில் ஹிந்தியை தடை செய்ய டிரெண்ட் வருமா? பாஜக பிரமுகர் கேள்வி!

தனியார் பள்ளிகளில் ஹிந்தியை தடை செய்ய டிரெண்ட் வருமா? பாஜக பிரமுகர் கேள்வி!
, ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (13:54 IST)
திரை உலகினர் ஒரு சிலர் நேற்று முதல் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்திருக்கும் டீசர்ட்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அது மட்டுமின்றி ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஹிந்திக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவினர் தங்களது சமூக வலைதளங்களில் இந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’இந்திக்கு எதிராக டிவிட்டரில் டிரெண்ட் செய்பவர்கள் தனியார் பள்ளிகளில் இந்தியை தடை செய்ய குரல் கொடுப்பார்களா?என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஹிந்தியை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹிந்தி ஒன்றும் சிறந்த மொழியும் அல்ல. பல மொழிகளின் கலவையே ஹிந்தி. பெரும்பான்மை இந்தியர்கள் பேசுவதால் ஹிந்திக்கு மரியாதை. தனியார் பள்ளிகளில் ஹிந்தியை தடை செய்யுங்கள் அல்ல அனைவருக்கும் ஹிந்தி பயிலும் வாய்ப்பை தாருங்கள். அதுவே நலைபாடு.
 
திமுகவினர் நடத்தும் பெரும்பாலான பள்ளிகளில் ஹிந்தியை கற்று கொடுத்துவிட்டு தற்போது ‘ஹிந்தி தெரியாது போடா’ என்று குரல் கொடுப்பதில் இருந்தே அவர்களுடைய இரட்டை வேடம் தெரிய வருகிறது என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

PUBG செயலிக்கு பதிலாக களத்தில் குதிக்கும் அக்ஷய் குமாரின் FAU- G இதன் சிறப்பு என்ன?