Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை..! உயர்நீதிமன்றம் வேதனை..!!

Advertiesment
highcourt

Senthil Velan

, சனி, 15 ஜூன் 2024 (13:09 IST)
பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை என்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
 
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாகா கமிட்டியில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அங்கு நடைபெற்ற விசாரணையில் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் மோகன கிருஷ்ணனை கைது செய்தனர். இந்த நிலையில், தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து மோகன கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 
 
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி,  ‘பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை என்றும் இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
 
பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது என்று அவர் கூறினார். பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாகவும் பெண்களைப் பாதிக்கிறது எனத் நீதிபதி தெரிவித்தார். 

 
மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் மீண்டும் விசாரித்து அறிக்கை தர வேண்டும் என நீதிபதி பரதசக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரும்பான்மை இல்லை.! மோடி ஆட்சி நிச்சயம் கவிழும்..! மல்லிகார்ஜுன கார்கே கணிப்பு..!!