Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் உறவு வைக்க கைதிக்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம்

Webdunia
வியாழன், 25 ஜனவரி 2018 (22:59 IST)
ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் மனைவி தான் குழந்தை பெற விரும்புவதாக தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், கைதிக்கு இரண்டு வார விடுப்பு கொடுத்து அனுமதி அளித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த சித்திக் அலி என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். இவரது 32 வயது மனைவி நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் அதற்குரிய சிகிச்சை எடுத்து தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள உடல்ரீதியாகவும் மருத்துவரீதியாகவும் தயாராக இருப்பதாகவும், எனவே தனது கணவரை 60 நாட்கள் விடுமுறையில் வெளியே விடவேண்டும் என்றும் அவர் மனுதாக்கல் செய்தார்

இந்த மனுவிற்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்ப்பு தெரிவித்திருந்த நிலையிலும் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு பெண்ணின் உரிமை என்றும், கைதியாக இருந்தாலும் அவர் மனைவியுடன் உறவு கொள்வது உள்பட ஒருசில உரிமைகளை கொடுத்தால் அவர் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறி சித்திக் அலிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச் ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு.. சொந்த ஜாமீனில் விடுவிப்பு..!

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு! பயணங்களை தவிர்க்க வேண்டுகோள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடக்கம்.. டிசம்பர் 13ஆம் தேதி மகாதீபம்..!

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

அடுத்த கட்டுரையில்