Publish Date: Tue, 07 Aug 2018 (20:45 IST)
Updated Date: Tue, 07 Aug 2018 (20:52 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுத்ததால் திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
மெரினாவில் கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதான சாலை முகப்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்ய தயார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் போராட்டம், நடத்தி வருகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. ஆழ்வார்பேட்டையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் தொண்டர்களை அமைதி காக்க வலியியுறுத்தியுள்ளார்.
webdunia
Publish Date: Tue, 07 Aug 2018 (20:45 IST)
Updated Date: Tue, 07 Aug 2018 (20:52 IST)