Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரோட்டா விலை இவ்வளவா? கடுப்பாகி கடையை நொறுக்கிய கஸ்டமர்கள்

Advertiesment
பரோட்டா விலை இவ்வளவா? கடுப்பாகி கடையை நொறுக்கிய கஸ்டமர்கள்
, சனி, 1 டிசம்பர் 2018 (11:38 IST)
சென்னையில் பரோட்டா பிரச்சனையில் ஒரு உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்திற்கு நேற்றிரவு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சிலர் சாப்பிடச் சென்றனர். அப்போது கடையில் பரோட்டா விலை என்ன என கேட்டுள்ளனர். 
 
பரோட்டாவின் விலை அதிகமாக இருப்பதாக கூறி அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சேர், மற்று ட்ரேவால் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பிரச்சனை செய்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெர்முடா டிரையாங்கில் போல நெவாடா டிரையாங்கில்: 2000 விமானங்கள் மாயமான மர்மம்!