7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (16:41 IST)
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதை அடுத்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு மூன்று ஜீயர்கள் சென்றதாகவும், அங்கு தோஷ நிவர்த்தி செய்ததாகவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் மீது அவதூறு பரப்பியதாக நரசிம்மன் மீது போலீசார் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை போலீசார் கைது செய்தனர். அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவர் ஜாமீன் பெற்றார். இதனால் இன்று அவர் சென்னை மத்திய சிறையில் இருந்து விடுதலையானார். அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த உதயநிதி..!

ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு எனர்ஜி.. கூட்டத்தின் கவனத்தை சிதறவிடாத விஜய்யின் பேச்சு..!

களத்தில் இல்லாத அதிமுக.. தீய சக்தி திமுக.. ஈரோட்டில் அடித்த ஆடிய விஜய்..!

அனல் பறந்த விஜய்யின் 31 நிமிட பேச்சு.. செங்கோட்டையனின் பக்கா ஸ்கெட்ச் வெற்றி..!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் VP-G Ram G மசோதா.. கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments