Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்கன் 65 ஆர்டர் எடுத்த சர்வர் மண்டை உடைப்பு: மதுரை ஓட்டலில் பரபரப்பு

Advertiesment
சிக்கன் 65 ஆர்டர் எடுத்த சர்வர் மண்டை உடைப்பு:  மதுரை ஓட்டலில் பரபரப்பு
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (19:30 IST)
சிக்கன் 65 ஆர்டர் எடுத்த சர்வர் மண்டை உடைப்பு
மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு இலையை வைத்து ஆர்டர் எடுத்து விட்டு அதன் பின்னர் திடீரென அந்த சர்வர் எடுத்ததால் இலையை எடுத்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டடு அதனால் சர்வரின் மண்டை உடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மதுரை அருகே உள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட வந்தார். அவர் உட்கார்ந்ததும் அவரிடம் ஆர்டர் எடுக்க அந்த சர்வரிடம் அந்த வாடிக்கையாளர் சிக்கன் 65 கொண்டு வருமாறு கூறினார். இதனையடுத்து அவருக்கு இலை போட்டு தண்ணீர் வைத்த சர்வர், சிக்கன் 65 ஆர்டரை கிச்சனில் கொடுப்பதற்காக சென்றார் 
 
அந்த சமயம் ஓட்டலின் முதலாளி சர்வரை அழைத்து அந்த வாடிக்கையாளர் ஏற்கனவே நிறைய கடன் வைத்துள்ளார் என்றும் அதனால் அவருக்கு எந்த உணவும் கொடுக்க வேண்டாம் என்றும் இலையை எடுத்துவிட்டு வெளியே அனுப்பிவிடு என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து வாடிக்கையாளருக்கு போட்ட இலையை சர்வர் எடுத்துள்ளார். இதனை அதிர்ச்சியுடன் பார்த்த வாடிக்கையாளர் ஏன் என்று கேட்டபோது முதலாளி உங்களுக்கு எதுவும் தர வேண்டாம் என்று கூறி விட்டதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடர்ந்த அந்த வாடிக்கையாளர் சர்வரின் மண்டையை உடைத்தார். இதனால்ள ரத்தம் சொட்டச் சொட்ட சர்வர் மயங்கிய நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இந்த நிலையில் இதுகுறித்து கொடுக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்த வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். வாடிக்கையாளர் ஒருவரிடம் சிக்கன் 65 ஆர்டர் எடுத்த சர்வரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணில் டாட்டூ வரைந்த பிரபல பாடகியின் பார்வை பறிபோன பரிதாபம்