Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களின் தேவைகளை கேட்டறிந்த நடிகை குஷ்பு...தீவிர வாக்கு சேகரிப்பு

Advertiesment
பெண்களின் தேவைகளை கேட்டறிந்த நடிகை குஷ்பு...தீவிர வாக்கு சேகரிப்பு
, சனி, 3 ஏப்ரல் 2021 (23:37 IST)
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு மக்களை சந்தித்து தங்களது வெற்றி சின்னமாம் தாமரைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். 
 
திமுகவின் பலமிக்க ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். தன்னை வேட்பாளராக அறிவித்த நாளில் இருந்து நாள்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு மக்களின் ஆதரவு  பெருகிக் கொண்டே செல்கிறது. வீடு வீடாக செல்லும் குஷ்பு பெண்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன், தொகுதி பிரச்சனையையும் பொறுமையாக அனைவரிடம் கேட்டுக் கொண்டார். தனக்கே உரிய பாணியில் குழந்தைகளை கொஞ்சியும், தொகுதி மக்களுடன் செல்பி எடுத்தும் குஷ்பு வாக்குகளை சேகரித்து வருகிறார்.  
 
அந்த வகையில் இன்று திறந்த வெளி வாகனத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்ற குஷ்பு தாமரைக்கு ஓட்டு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். வாக்களிக்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் குஷ்புவிம் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசும், அதிமுக அரசும் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். 
 
ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவிற்கு சாதகமானது என்பதை உணர்ந்து புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு வெற்றி வாய்ப்புகள் பலமாக இருக்கிறது என்றே கூறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் இணைந்த அமமுக வேட்பாளர்...