Publish Date: Sat, 03 Sep 2022 (17:17 IST)
Updated Date: Sat, 03 Sep 2022 (17:18 IST)
கேரளாவில் வரும் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அவர்கள் அறிவித்துள்ளார்
கேரளாவில் வரும் 8ஆம் தேதி மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாட உள்ளன என்பதும் இதனை அடுத்து அம்மாநிலத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8-ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்காக செப்டம்பர் 10ஆம் தேதி அனைத்து மாநில அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.