சிவன் மற்றும் பார்வதிக்கு வட மாநிலங்களில் விநாயகர் என்ற ஒரு பிள்ளை மட்டும் உண்டு என்றும் தென் மாநிலங்களில் மட்டும்தான் முருகன் இருக்கிறார் என்றும் அப்படி என்றால் வட மாநிலங்களில் சிவன் பார்வதிக்கு விநாயகர் பிறந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு நடத்தப்பட்டதா என்றும் தர்மபுரி எம்பி செந்தில்குமார் கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் மட்டுமே ஹிந்துக்களுக்கு திமுக ஆதரவு என்று கூறி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் இந்துக்களுக்கு எதிராக பேசுவதை திமுகவினர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தென் மாநிலத்தில் மட்டும்தான் சிவன் பார்வதியின் மகனாக முருகன் அறியப்படுகிறார் என்றும் வட மாநிலங்களில் விநாயகர் மட்டுமே சிவன் பார்வதி மகனாக உறுதி செய்த நிலையில் அதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன் என்றும் எந்த கடவுளையும் இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை என்றும் செந்தில்குமார் எம்பி விளக்கம் அளித்துள்ளார்.