Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்: பாஜக பிரபலம்..!

Mahendran
செவ்வாய், 23 ஜூலை 2024 (13:29 IST)
செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி வந்ததை அடுத்து முதலில் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் ஸ்டான்லி மருத்துவமனை ஓமந்தூரார் மருத்துவமனை என மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி, செந்தில் பாலாஜியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 'திடீர்' நெஞ்சுவலி ஏற்பட்டு முதலில் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர்  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியூட்டி கூடிய  வருத்தத்தையும், வியப்பையும் அளிக்கிறது.
 
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டது.
 
இந்நிலையில் நேற்று  (ஜூலை 22) முதன்மை நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவிற்கு நேரில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
 
பலமுறை நம் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தும் தொடர்ந்து  செந்தில்பாலாஜி அவர்களுக்கு நெஞ்சு வலி வருவது கவலையளிக்கிறது. அதனால் தமிழக முதல்வர் அவர் மீது கருணை கொண்டு உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து செந்தில்பாலாஜியின் உடல்நலம் காக்க வேண்டும். ஒரு வேளை, அவ்வளவு தூரம் பயணிக்க முடியாதென்றால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலாவது அவரை அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் அவரின் 'சேவை' இந்த நாட்டிற்கு 'தேவை' என்பதை முதல்வர் புரிந்து கொண்டு அவரை கனிவோடு எய்ம்ஸ் மருத்துவமணையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments