மதுபான பார்களை பினாமி பெயர்களில் எடுத்து, கள்ள மது விற்று, அதன்மூலம் வந்த பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை கப்பம் கட்டிய செந்தில் பாலாஜி திரு.ஸ்டாலின் அவர்களுக்கு செயல் வீரராம்!'' என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக தலைமையில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இன்று கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, வேட்பாளர் K.R.L. தங்கவேல் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''கரூர் தொகுதிக்கு தனி மாவட்ட அந்தஸ்து அளித்து, இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஒரே கட்சி அதிமுக.
.
தானியத்தை காட்டினால் என்ன தானியம் என்று சொல்ல தெரியாத திரு. ஸ்டாலின் அவர்கள், பச்சைதுண்டு போட்டு பச்சைப்பொய் பேசுகிறேன் என்று சொல்கிறார். வேளாண்மை பற்றி திரு. ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயத்தைப் பற்றி மேடை போட்டு பேச நான் தயார்! யார் விவசாயி என்பதை நிரூபித்து காட்டுகிறேன்.
அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது செந்தில் பாலாஜியை வசைபாடிய
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இப்போது புகழாரம் சூட்டுகிறார்.
ஐந்து கட்சிகளுக்கு மாறி, ஒரே ஆண்டில் இரு வேறு கட்சிகளின் சின்னங்களில் நின்ற ஒருவர் திமுகவிற்கு செயல் மறவராம்!
மதுபான பார்களை பினாமி பெயர்களில் எடுத்து, கள்ள மது விற்று, அதன்மூலம் வந்த பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை கப்பம் கட்டிய செந்தில் பாலாஜி, திரு.ஸ்டாலின் அவர்களுக்கு செயல் வீரராம்!'' என்று தெரிவித்துள்ளார்.