Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் காவல் 18வது முறையாக நீட்டிப்பு..! பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!!

Senthil Velan
புதன், 31 ஜனவரி 2024 (16:25 IST)
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடித்துசென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்  கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
 
இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வழக்கை விசாரித்தார். அப்போது, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

ALSO READ: நாளை 11 பள்ளிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?...

விசாரணையின் போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments