Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..! 3-வது முறையாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

Senthil Velan
வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:28 IST)
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. 
 
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ALSO READ: தந்தை பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு!
 
இதையடுத்து, செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் கோரி 3ஆவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
 
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது தீர்ப்பளித்த சென்னை முதன்மை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து. அவரது  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 3-ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments