அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த மனுவின் தீர்ப்பு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் தற்போது அவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்காது என சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை முடிவடைந்து உள்ள நிலையில் வரும் 12ஆம் தேதி இந்த மனு மீதான தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.