அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் அவரது கைது சட்டவிரோதம் என நீதிமன்றத்தில் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் கைது சரிதான் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவரை காவலில் எடுக்கவும் அனுமதி அளித்தது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி ஐந்து நாட்களுக்கு காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்தனர்.
இந்த விசாரணை அறிக்கையை மேலதிகாரிகளுக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஐந்து நாள் காவல் முடிவடையும் நிலையில் அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தினர். இதன் பின்னர் மீண்டும் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.