அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. 
 
									
										
			        							
								
																	
	 
	இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.