செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் வெளியான தீர்ப்பில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு விதமாக தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அவர்களுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நாளை பட்டியலிட மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை சனிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்றும் இல்லாவிட்டால் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியான சிவி கார்த்திகேயன் அவர்களது தீர்ப்பு முக்கியத்துவமாக கருதப்படுகிறது.