Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது? தொடரும் குழப்பம்..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர்  செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் செந்தில் பாலாஜிவின் ஜாமின் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க மறுத்து சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது. 
 
ஆனால் சிறப்பு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்து சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தெரிவித்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்றும் எனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்புக்கு நீதிபதியும் எம்.சுந்தர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments