Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டே இல்லாத தமிழகம்... ஆனால் செந்தில் பாலாஜி வைத்த செக்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (10:02 IST)
தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். 

 
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கள் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
மேலும் மின் கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார். இது கடும் விமர்சனங்களுக்கும் கிண்டல் கேலிகளுக்கு உள்ளானது. இதனிடையே தற்போது பராமரிப்புப் பணிகள் முடிந்துள்ள நிலையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே இனி நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக இனி புகார் கூறக்கூடாது என  குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments