முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Mahendran
திங்கள், 29 ஏப்ரல் 2024 (11:32 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்து  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பண மோசடி தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார் என செந்தில்பாலாஜி தரப்பு வாதம் செய்த நிலையில் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மே 6ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
எனவே இன்றும் செந்தில் பாலாஜி வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் மே 6ஆம் தேதி மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வரும்போது அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
முன்னதாக  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக   அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவர் ஜாமீன் பெற்று வெளியே வர முடியவில்லை.  செந்தில் பாலாஜி வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பிலிருந்து ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments