கொடநாடு கொலை வழக்கில் அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை அடுத்து ஜூன் மாதத்திற்கு இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொடநாடு கொலை வழக்கு விசாரணை இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்றைய விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் வாலையார் மனோஜ் என்பவர் மட்டுமே ஆஜரானார்
மேலும் கொடநாடு பங்களா சென்று ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை நகலை வழங்க குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். நிபுணர் குழு அறிக்கை நகலை குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்க முடியுமா என அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி கேட்ட நிலையில் அரசு தரப்பு இதற்கு கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 21 ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கனகராஜ் ஆகியோர் இன்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது,