Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூத்த தமிழறிஞர் ஒளவை நடராஜன் காலமானார்....

avvai natarajan
, திங்கள், 21 நவம்பர் 2022 (22:40 IST)
தமிழறிலர் ஒளவை நடராஜன் உடல்  நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாடறிந்த தமிழறிஞரும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஒளவை நடராஜன்.

இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார்..

அவ்வப்போது, தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.
 

Edited By Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியை வெட்டிக் காட்டில் புதைத்த கணவன்!