சீனியர் சிட்டிசன் நான் வெளியே காத்திருக்கும் நிலையில் அஜித்தை மட்டும் எதற்காக முன்கூட்டியே உள்ளே ஓட்டு போட அனுமதித்தீர்கள் என முதியவர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் அஜித் முதல் நபராக காலை 7 மணிக்கு முன்பே வரிசையில் இன்று வாக்களித்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அஜித்தை வாக்களிக்க காவல்துறையினர் அனுமதித்து உள்ளே அனுப்பிய போது சீனியர் சிட்டிசன் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நான் சீனியர் சிட்டிசன், எனக்கு முன்னுரிமை கொடுக்காமல், அஜித்தை ஏன் உள்ளே அனுப்புகிறீர்கள், என்னை உள்ளே அனுப்புங்கள் என்று அந்த சீனியர் சிட்டிசன் வாக்குவாதம் செய்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து, அஜித் வாக்களித்து வந்தவுடன் உங்களை அனுப்புகிறேன் என்று காவல்துறை அதிகாரி சமாதானம் செய்தார்.
இருப்பினும் அந்த முதியவர் காவல்துறை அதிகாரியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை எடுத்து ஒரு கட்டத்தில் அந்த முதியவர் அஜித்தை வெளியே அனுப்புங்கள், என்னை வாக்களிக்க உள்ளே அனுப்புங்கள், என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.