இது எங்களுக்கு வேண்டும், இல்லையென்றால் ராஜினாமா - அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (15:13 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் மதுரையை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் தெரிவித்துள்ளார்.


 


 
எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் தினகரன் ஆதரவு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ. போஸ் ஆகியோர் மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
மேலும் இதுகுறித்து எம்.எல்.ஏ. போஸ் கூறியதாவது:
 
தென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 
 
கோரிக்கையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுக மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே பதவியை ராஜினாமா செய்ய தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு இருப்பதை கைவிட கூடாது.. விஜய் கூட்டணி குறித்து திருநாவுக்கரசர்..!

அன்புமணியின் இன்றைய போராட்டமும், அதில் இருக்கும் அரசியலும்.. யார் யார் கலந்து கொண்டனர்?

குடிமைப்பணி தேர்வு: தேர்வர்களுக்கு 5 ஆயிரம் உதவித்தொகை!.. விண்ணப்பிப்பது எப்படி?...

அடுத்த கட்டுரையில்
Show comments