Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாரோ ஒட்டுன போஸ்டர், எனக்கு தெரியாது? விஸ்வாசி செங்கோட்டையன்!

Advertiesment
யாரோ ஒட்டுன போஸ்டர், எனக்கு தெரியாது? விஸ்வாசி செங்கோட்டையன்!
, வியாழன், 13 ஜூன் 2019 (09:17 IST)
அமைச்சர் செங்கோட்டையனிடம் சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து கேட்ட போது யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது என்றார்.
 
நேற்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்' என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் அதிமுக தலைமையகத்தில் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அதனை தொடர்ந்து சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், 'அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்' என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். 
webdunia
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், யாரோ போஸ்டர் ஒட்டியதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் இறுதி மூச்சு இருக்கும் வரை முதல்வர், துணை முதல்வர் தலைமையில் செயல்பட்டு வரும் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன்.
 
பொதுச்செயலாளர் பதவி வழங்கக் கோரி போஸ்டர் ஒட்டப்பட்டது தவறு. தற்போதுள்ள அதிமுக தலைமையை ஏற்று செயல்படுவேன் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையின் முக்கிய சாலையில் திடீரென தோன்றிய பள்ளம்: பெரும் பரபரப்பு