நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் – உறுதிப்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன் !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (07:43 IST)
நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், அதில் அதிமுக வெற்றிபெறும் என அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் பதவிக்காலம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.  இதனால் உள்ளாட்சிப் பணிகள் நடக்காமல் முடங்கியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக  30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. இதனால் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் இது பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். அதில் அதிமுக வெல்லும். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்! - இன்று திறந்து வைக்கிறார் ’தல’ தோனி!

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments