சசிகலாவிடம் கதறி கதறி அழுத செங்கோட்டையன்: போட்டுடைத்த புகழேந்தி!

சசிகலாவிடம் கதறி கதறி அழுத செங்கோட்டையன்: போட்டுடைத்த புகழேந்தி!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (16:39 IST)
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியது முதல் தற்போது வரை சசிகலா, தினகரன் ஆகியோரது தீவிர விசுவாசியாக இருப்பவர் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி.


 

 
 
சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் சிறையில் இருந்த கடினமான சூழலில் கூட புகழேந்தி தீவிர ஆதரவாளராக இருந்து பொதுக்கூட்டங்களை நடத்தினார். இந்நிலையில் இப்போது அதிமுக அமைச்சர்கள் சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கியுள்ளதால் புகழேந்தி தனது ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இன்று பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று புகழேந்தியை பேட்டி எடுத்தது. அதில் கலந்துகொண்டு பேசிய புகழேந்தி மிகவும் வெளிப்படையாக பேசினார். சசிகலாவை, தினகரனையும் அமைச்சர்கள் ஒதுக்கி வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.
 
சசிகலாவையும், தினகரனையும் இன்று ஒதுக்கி வைக்கும் அமைச்சர்கள் அன்று சசிகலாவை சிறையில் வந்து சந்தித்தார்கள். அவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை நான் செய்தேன். சந்திப்பின் போது கூடவே இருந்திருக்கிறேன். அமைச்சர் செங்கோட்டையன் சசிகலாவிடம் கதறி கதறி அழுதிருக்கிறார்.
 
செங்கோட்டையனின் கையில் தட்டிக்கொடுத்த சசிகலா, எதற்கு அழுகிறீர்கள், தைரியமாக இருங்கள் என ஆறுதல் எல்லாம் சொல்லியிருக்கிறார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் அழுதிருக்கிறார். அன்று இப்படி கதறி அழுதவர்கள் எப்படி இன்று ஒதுக்கி வைக்கிறார்கள்? என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments