Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க சீட் குடுக்கலைன்னா சுயேட்சையா போறேன்! – அதிமுக எம்.எல்.ஏ நீக்கம்!

Advertiesment
நீங்க சீட் குடுக்கலைன்னா சுயேட்சையா போறேன்! – அதிமுக எம்.எல்.ஏ நீக்கம்!
, வியாழன், 18 மார்ச் 2021 (14:29 IST)
சட்டமன்ற தேர்தலில் சீட் தராததால் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு அளித்த அதிமுக எம்.எல்.ஏ கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது அதிமுக. இந்நிலையில் தேர்தலில் சீட் கிடைக்காததால் கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், வேறு கட்சிக்கு செல்வதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரனுக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் சேந்தமங்கலத்தில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கட்சி கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெல்மெட் அணியாமல் லாரி ஓட்டிய டிரைவருக்கு ரூ.1000 அபராதம்!