Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செல்வப்பெருந்தகை காரணமா? ராகுல் காந்திக்கு கடிதம்..!

Advertiesment
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செல்வப்பெருந்தகை காரணமா? ராகுல் காந்திக்கு கடிதம்..!

Mahendran

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (10:59 IST)
பகுஜன் சமாதி கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகுதான் அவர் காங்கிரசில் இணைந்தார்.

அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால்தான் அவர் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால்தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்’ என்று கூறியுள்ளார்.


இந்த விவகாரம் குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘என் மீது யாரோ ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி பற்றி கேட்டதால் டென்ஷன் ஆன ரஜினிகாந்த்! - என்ன சொன்னார் தெரியுமா?