Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் பக்கம் சாய்ந்த மக்கள்: செல்லூரார் பெருமிதம்!

முதல்வர் பக்கம் சாய்ந்த மக்கள்: செல்லூரார் பெருமிதம்!
, சனி, 27 பிப்ரவரி 2021 (14:26 IST)
வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதற்கு மக்கள் முதல்வர் பக்கம் சாய்ந்து விட்டனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி. 

 
மதுரை விளாங்குடி மற்றும் பொன்மேனி ஆகிய பகுதிகளை முதலமைச்சரின் அம்மா மினி கீளினிக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார் இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் அமைச்சர் செய்தியாளர்கள் கூறும்போது...
 
கொரானா சூழலில் வேலைநிறுத்தம் என்பது வரவேற்க வேண்டியதில்லை. போக்குவரத்து பணிமனைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் கடனில் இருந்தது. அதிமுக ஆட்சியில் தான் மானியம் கொடுத்து புதிய பேருந்துகளை வாங்கி, சீர்படுத்தியவர் ஜெயலலிதா. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உதவியாக உள்ள அரசு அதிமுக.
 
பொதுவாக கல்வியாளர் ஆலோசனை பெற்றே ஆல்பாஸ் முடிவை முதல்வர் அறிவித்தார். எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் முதல்வர் செய்யமாட்டார். நன்கு ஆராய்ந்து அதிகாரிகளோடு ஆலோசித்து ஆல்பாஸ் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். கொரானா சூழலில் பிள்ளைகள் படிக்க காலம் போதவில்லை. தேர்வு என்பது எட்டாக்கனியாக இருந்தது. மாணவர் சஞ்சலத்தை போக்கும் வகையில் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் இந்த அறிவிப்பை வரவேற்கின்றனர். பள்ளிக்கு செல்லாமல் எப்படி பரீட்சை எழுது முடாயும். எது செய்தாலும் அதில் தவறுசொல்லக்கூடியவர்கள் எதிர்க்கட்சியினர். ஊழலற்ற செயல்பாட்டை ஆட்சியை நடத்துபவர் பிரதமர். தான் என்ற அதிகாரம், கட்டப்பஞ்சாயத்து, அரசியல் குறுகீடு இல்லை உள்ளிட்ட எந்தப்பிரச்சனைகளும் இல்லாமல் நாடு அமைதியாக உள்ளது. குடும்ப ஆட்சி ஆதிக்கம் இருக்க கூடாது என பிரதமர் கூறியுள்ளார்.வாரிசு அரசியல் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
 
இங்கிலாந்து இந்தியா கிரிக்கெட் எப்படியோ அதுபோல தற்போது ஸ்டாலினுக்கு எப்படி பால் போடுவது என்றே தெரியவில்லை. முதல்வரின் அறிவிப்புகளால் ஸ்டாலின் கீளின் போல்ட் ஆகிவிடுவார். வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக எடப்பாடியார் வருவதற்கு   மக்கள் முதல்வர் பக்கம் சாய்ந்து விட்டனர்.
 
உதயநிதி விருப்ப மனு அளித்துள்ளது குறித்த கேள்விக்கு, திமுகவில் வாரிசு அரசியல் பட்டவர்த்தனமாக தெரிந்து விட்டது. ராகுல்காந்தி கடலில் குதித்து நீச்சல் அடித்தது குறித்த கேள்விக்கு, ராகுல்காந்தியின் செயல்பாடுகள் காங்கிரசுக்கு வலு சேர்க்காது. நகைச்சுவையாக தான் உள்ளது. மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இவர்கள் ஆட்சியில் தான். இலங்கை தமிழர்கள் கொன்று குவித்து விட்டு, மீனவர்களை இலங்கை கடற்படை அதிகளவில் கைது செய்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.
 
ஆனால் இன்று அவ்வாறு இல்லை. பாரத பிரதமர் நடவடிக்கையால் மீனவர் பிரச்சனைகள் குறைந்துள்ளது. ஆண்மை மிக்க பிரதமரை இந்தியா கண்டுள்ளது. ராகுல்காந்தி செயல்பாடுகளை நகைச்சுவையாக தான் பார்ப்பார்கள். இதை பெரிய விஷயமாக மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
 
நிறைய தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பிரச்சார வேலைகளை தொடங்கியுள்ளது குறித்த கேள்விக்கு, எல்லா இயக்கத்திலும் அவ்வாறு செய்கிறார்கள். கூட்டணி இடங்களை கேட்பதில் அவர்களுக்கு உரிமை உள்ளது. தினகரன் முதல்வர் வேட்பாளர் என அமமுக தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் செல்லூர் ராஜூ மறுப்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் வேலை நிறுத்தம் : பயணிக்க அவதிப்படும் மக்கள்!