Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும்; செல்லூர் ராஜூ

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (13:06 IST)
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்துப் போட்டியிடும் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என ஜெயலலிதா எடுத்த கொள்கை முடிவிற்கு மாறாக, கூட்டணி வைத்து விட்டோமே என்கிற உறுத்தல் எங்களிடம் உள்ளது என்றும், இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
 
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார். ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
 
ஜனநாயகம் நிலைக்கப் போவதில்லை என தெரிந்தே விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, மக்களை விலைபேசி வாங்கிய வெற்றியாகும் என்றும் செல்லூர் ராஜூ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments