Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அரசியல் கட்சி.. சட்டமன்ற தேர்தலில் போட்டி.. பிரசாந்த் கிஷோர் அதிரடி..!

Mahendran
செவ்வாய், 18 ஜூன் 2024 (13:00 IST)
பிரபல அரசியல் கணிப்பு வல்லுனர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சி தொடங்கி 2025 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அரசியல் கட்சிகளிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி அக்கட்சியை ஜெயிக்க வைக்க டிஜிட்டல் மூலம் பணி செய்து வரும் நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசாந்த் கிஷோர் என்பதும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக அவர் பணிபுரிந்தார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற இயக்கத்தை நடத்தி வரும் நிலையில் அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். மேலும் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரேசன் கடைகளின் அவல நிலை.. விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. எடப்பாடி பழனிசாமி

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!

100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை..! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!!

வெளி மாநில பதிவெண் விவகாரம்: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் முக்கிய கோரிக்கை..!

3 நாட்களுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments