2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக பல குழப்பங்களை சந்தித்து இப்போது ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையின் கீழ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் 7 மாதத்தில் தமிழகத்துக்கு சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே கேள்வியை அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘இப்போது அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர். ’ எனக் கூறியுள்ளார். அதனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தேர்தல் சமயத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.